புலிச்சந்தேகநபர்கள் 62 பேர் விடுதலை-அரசாங்கம் தீர்மானம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டுள்ள எல்.ரி.ரி.ஈ. சந்தேகநபர்கள் 62 பேரை இரண்டு கட்டங்களில் விடுதலை செய்வற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ள 32 கைதிகள் எதிர்வரும் 9 ஆம் திகதியும் ஏனைய 30 பேரும் இம்மாதம் 20 ஆம் திகதியும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்கள் தொடர்பில் விரைவாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எழுந்துள்ள வேண்டுகோள்களுக்கமைய பிரதமரின் ஆலோசனையின் பேரில் நீதி, சட்டம், பொது மக்கள் அமைதி, சிறைச்சாலைகள் ஆகிய அமைச்சுக்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் பின்னர் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய எல்.ரி.ரி.ஈ. சிறைக் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய சிறைச்சாலைகள் மற்றும் நீதி அமைச்சு என்பவற்றினால் குழுவொன்று அமைக்கப்பட்டு அதில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply