224 பேருடன் நொறுங்கி விழுந்த ரஷிய விமானம் வெடிகுண்டால் தகர்க்கப்பட்டது: எகிப்து செல்லும் ரஷிய விமானங்கள் ரத்து

0162b5f3-d4be-42c5-93eb-fe7b1844ef90_S_secvpfஎகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன் கடந்த மாதம் 31-ம் தேதி புறப்பட்டுச் சென்ற ரஷியாவுக்கு சொந்தமான தனியார் பயணிகள் விமானம் 24 நிமிடங்களில் மத்திய சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கியது. செங்கடலை ஒட்டியுள்ள கடற்கரை நகரமான ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து திரும்பிய அந்த விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் ரஷிய நாட்டு சுற்றுலா பயணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 குழந்தைகள் உள்பட 224 பேரும் பலியான இந்த விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் எகிப்தில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரினர்.

 

இந்த கோரச் சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட எகிப்து மீட்புப் படை அதிகாரிகள் விபத்துக்குள்ளான விமானத்தின் இரு கருப்புப் பெட்டிகளும் கண்டெடுத்தனர். அவற்றில் பதிவாகியுள்ள விமானியின் உரையாடலை ஆய்வு செய்த பின்னர், அந்த விமானத்தினுள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததால் விமானம் வெடித்து, சிதறியதாக நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

விமானம் புறப்பட்ட 23 நிமிடங்கள்வரை விமானியின் உரையாடல்கள் கருப்புப் பெட்டியின் ஒலிப்பேழையில் பதிவாகியுள்ளன. 24-வது நிமிடம் மயான அமைதியும், அதைத்தொடர்ந்து பயங்கர வெடிச் சத்தமும் கேட்பதால் அந்த விமானத்தினுள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததால்தான் அந்த விமானம் நொறுங்கி விழுந்ததாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதுதொடர்பாக, மேற்கொண்டு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் எகிப்து நாட்டுக்கு செல்லும் ரஷிய விமானச் சேவைகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறு அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். எகிப்தின்  ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருக்கும் சுமார் 50 ஆயிரம் ரஷியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

இதேபோல், இங்கிலாந்தும் எகிப்துக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளது. எகிப்தில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை பத்திரமாக தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் கெய்ரோவில் உள்ள இங்கிலாந்து உயர்தூதரக அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply