37 கிறிஸ்தவ சிரியர்களை விடுவித்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு

isisசிரிய கிறிஸ்தவர்கள் 37 பேரை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு விடுதலை செய்துள்ளதாக சிரியாவில் உள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 27 பேர் பெண்கள். 10 பேர் ஆண்கள்.8 மாதங்களுக்கு முன்பாக, வடகிழக்கு சிரியாவில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட சுமார் இருநூறு பேரில் இவர்களும் அடங்குவர். ஹசாகே மாகாணத்தில் உள்ள டல்டம்ர் நகருக்கு நேற்று காலை அவர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

 

சிரியாவிலும், ஈராக்கிலும் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்களை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply