குவைத்தில் பலத்த சத்தத்துடன் பூஜை செய்த 11 இந்தியர்கள் கைது
குவைத்தில் கர்நாடக மாநிலம் கடற்கரை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு நவசைதன்யா நல சங்கத்தினர் சத்யநாராயணா பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதன்படி குவைத்தின் மையப் பகுதியில் ஒரு கட்டிடத்தில் பூஜை நடத்தப்பட்டது. நள்ளிரவை தாண்டியும் பூஜை களை கட்டியது. அப்போது பக்தி மகிழ்ச்சியில் பக்தர்கள் பலத்த சத்தத்துடன் பஜனை பாடல்களை பாடி பூஜை செய்தனர்.இதற்கு அண்டை பகுதிகளில் குடியிருப்போர் கடும் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் 11 பேரை கைது செய்தனர்.
குவைத் சட்டப்படி எந்த வழக்கில் கைது செய்தாலும் அவர்களை 10 நாளில் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் 15 நாட்களுக்கு மேலாகியும் அவர்கள் ஆஜர்படுத்தவில்லை.
இதுகுறித்து உடுப்பி– சிக்மகளூரு தொகுதி எம்.பி. ஷோபா சரன் தலாஜி குவைத்தில் உள்ள இந்திய தூதர் ஜெயினுடன் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் அவர்களை விடுதலை செய்யும்படி மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply