கூட்டத்தில் காரை ஓட்டிச்சென்று மோதிய பாலஸ்தீனர் சுட்டுக்கொலை

gun fireபாலஸ்தீனுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மீண்டும் மோதல் தீவிரமாகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் மத்தியில் இருந்து தொடங்கி நடைபெற்று வந்த மோதல்களில் 11 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 74 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம்சுட்டுக்கொன்றுள்ளது. இவர்களில் 47 பேர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தவர்கள் என்று அந்த நாடு கூறுகிறது.

 

இந்த நிலையில் மேற்கு கரையில் இஸ்ரேலியர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தபோது, ஒரு பாலஸ்தீனர் நேற்று காரை

 

ஓட்டிச்சென்று கூட்டத்தில் மோதினார். இதில் 4 பேர் காயம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் துணை ராணுவத்தினர்

 

அங்கு விரைந்து சென்று அந்த நபரை சுட்டுக்கொன்றனர்.

 

இது குறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் லூபா சாம்ரி குறிப்பிடுகையில், “பாலஸ்தீனர் ஒருவர் இஸ்ரேலியர்களை தாக்க வேண்டும்

 

என்ற நோக்கத்தில் காரை மோதியபோது, 4 பேர் காயங்களுடன் தப்பினர். தாக்குதல் நடத்திய நபரை துணை ராணுவத்தினர்

 

சுட்டுக்கொல்ல நேரிட்டது” என கூறினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply