ஈரான் வரலாற்றில் முதன் முறையாக வெளிநாட்டு பெண் தூதர் நியமனம்
ஈரானில் இஸ்லாமிய சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. அங்கு பெண்களுக்கு என சில கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு உயர் பதவிகளில் பெண்கள் இருந்தாலும் வெளிநாட்டு தூதர் அந்தஸ்தில் இல்லை.இந்த நிலையில் தற்போது முதன் முறையாக வெளிநாட்டு பெண் தூதர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் மார்ஷியே ஆப்காம் (50). இவர் மலேசியாவின் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த தகவலை ஈரான் வெளியுறவு துறை மந்திரி முகமது ஜாவத் ஷரீப் தெரிவித்தார். மலேசியாவின் ஈரான் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஆப்காம் வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளராக பணிபுரிகிறார்.ஈரானில் 2013–ம் ஆண்டு நடந்த தேர்தல் ஹசன் ரஹ்காளி புதிய அதிபரானார். அதன் பிறகுதான் அமைச்சரவையிலும், அரசின் உயர் பதவிகளிலும் பெண்கள் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.1979–ம் ஆண்டு ஈரான் உருவானது. அதில் இருந்து வெளிநாட்டு தூதராக பெண் நியமிக்கப்படவில்லை. 35 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் முதன் முறையாக பெண் தூதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply