விடுதலைப்புலிகள் நடத்தி்ய துப்பாக்கிப் பிரயோகத்தில் கிராமசேவை அதிகாரி கொல்லப்பட்டார்

வட பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வசம் வந்துள்ள இரணைப்பாலை பகுதியில் காப்பரண்கள், பதுங்கு குழிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விடுதலைப்புலிகளின் இராணுவ தளமாக விளங்கிய பாடசாலை ஒன்று இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள இலங்கை இராணுவ தலைமையகம், புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற கடும் மோதல்களில் கொல்லப்பட்ட 9 விடுதலைப்புலிகளின் சடலங்கள் மற்றும் ஆயுதத் தளபாடங்கள் நேற்று கைப்பற்றப் பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

ஞாயிறன்று மேலும் 845 பொதுமக்கள் விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இருந்து புதுக்குடியிருப்பில் நிலைகொண்டுள்ள இராணுவத்தி்னரிடம் வந்து சேர்ந்திருப்பதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

அதேவேளை, நேற்றிரவு புதுமாத்தளன் பகுதியில் இருந்து இராணுவத்தினரை நோக்கி வந்த பொதுமக்கள் மீது விடுதலைப்புலிகள் நடத்தி்ய துப்பாக்கிப் பிரயோகத்தில் கிராமசேவை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும், இவரது உடலை உறவினர்கள் கொண்டு வந்ததையடுத்து, அது வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply