2000-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகள் பதக்கத்தை திருப்பி அளித்தனர்

old army ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், அளித்த வாக்குறுதியை காப்பாற்றாத மத்திய அரசின் போக்கை கண்டித்தும் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரிகள் தங்களது பதக்கத்தை திருப்பியளித்தனர். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் கடந்த ஜூன் மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, கடந்த சனிக்கிழமை அதற்கான அரசாணையை வெளியிட்டது.

 

இருப்பினும் தங்களது முக்கிய கோரிக்கைகள் பல மறுக்கப்பட்டுள்ளதால் அரசின் ஆணையை முற்றிலும் நிராகரிப்பதாக முன்னாள் ராணுவ வீரர்கள் கூறினர்.

 

முன்னாள் ராணுவ வீரர்களின் ஆட்சேபனையை நிராகரித்த பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர், ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் குறித்த அரசாணையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மேலும், அனைவரையும் திருப்திப்படுத்துவது முடியாத காரியம் என்றும் முன்னாள் ராணுவத்தினர் தெரிவித்துள்ள ஆட்சேபனைகள் குறித்து நீதி ஆணையம் அமைத்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

இந்நிலையில், அளித்த வாக்குறுதியை காப்பாற்றாத மத்திய அரசின் போக்கை கண்டித்து, தங்களது பதவிக்காலத்தில் ஆற்றிய வீரதீர சேவைகளை பாராட்டி, அளிக்கப்பட்ட பதக்கங்களை (மெடல்) இன்று முதல் திருப்பி அளிக்க ஓய்வுபெற்ற ராணுவ உயரதிகாரிகள் தீர்மானித்தனர்.

 

அதன்படி இன்று தங்கள் பதக்கத்தை திருப்பி அளித்தனர். இதுகுறித்து முன்னாள் கர்னல் கவுல் கூறுகையில் அம்பாலா, சண்டிகார், மோகா, ஜலந்தர் மற்றும குர்தாஸ்பூர் ஆகிய இடங்களில் பதக்கத்தை திருப்பி அளித்தோம். இதேபோல் மும்பை, புனே, வதோதரா மற்றும் பெங்களூருவிலும் இதுபோன்ற பதக்கத்தை திருப்பி அளிப்போம். இது சற்று முன்னோட்டம்தான்’’ என்றார்.

 

மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக சமீப காலமாக பல்வேறு துறைகளில் இருந்து அவார்டுகள் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply