காணாமல் போனோரின் உறவினர்களை அமைதி காக்குமாறு ஐ.நா கோரிக்கை

unoகாணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களை அமைதி பேணுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர். பலவந்தமான காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து வருகின்றனர்.ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள், அவரது மனைவி சந்தியாவுடனும் கலந்துரையாடியுள்ளனர்.

கலந்துரையாடல் நல்ல முறையில் நடைபெற்றதாகவும், சந்திப்பு குறித்து ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் அடுத்த வாரமளவில் கருத்து வெளியிடுவார்கள் என எக்நெலிகொடவின் மனைவி தெரிவித்துள்ளதுடன்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு முன்னுரிமை அளித்தே தாம் எதுவித கருத்துக்களையும் வெளியிடுவதனை தவிர்த்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து காணாமல் போனவர்களது உறவினர்களுடன் சந்திப்பு நடத்தி தகவல்களை திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply