யாழ்ப்பாணத்திற்கான யாழ்தேவி சேவையை ஆரம்பிக்க ஜனாதிபதி தமது ஒரு மாதச் சம்பளத்தை அன்பளிப்புச் செய்தார்
யாழ்ப்பாணத்திற்கான புதிய ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் கருத்திட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஒரு மாத சம்பளத்தை அன்பளிப்புச் செய்தார். மேற்படி கருத்திட்டத்தினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன் போது ஜனாதிபதி தமது ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் கையளித்தார்.
அதனையடுத்து ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் ஜனாதிபதி செயலக ஊழியர்களும் தமது ஒரு நாள் சம்பளத்தை மேற்படி திட்டத்திற்காக வழங்கினர். பிரபல தொழிலதிபர்கள், ரவீந்ர ரந்தெனிய, மாலினி பொன்சேகா போன்ற திரைப்படக் கலைஞர்களும் தமது அன்பளிப்புகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கிற்கும் தெற்கிற்குமான உறவுப் பாலமாகத் திகழும் இக் கருத்திட்டத்திற்குச் சகலரும் மனமுவந்து தமது பங்களிப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply