193 உயிர்களுக்கு பழிவாங்க சிரியாவில் ஐ.எஸ். முகாம்கள் மீது பிரான்ஸ் விமானப்படைகள் தாக்குதல்
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் உள்ள கலையரங்கம், உணவு விடுதி, கால்பந்து மைதானத்தை ஒட்டிய பகுதி என ஆறு இடங்களில் கடந்த 14-ம் தேதி நள்ளிரவு நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் 129 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த படுகொலைகளுக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள முகாம்களின்மீது ஈவிரக்கம் இல்லாமல் தாக்குதல் நடத்துமாறு பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே உத்தரவிட்டதையடுத்து, அந்நாட்டு விமானப்படைகள் கடந்த இரு நாட்களாக ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றன.
நேற்று முன்தினம் சிரியாவின் ரக்கா நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து பிரான்ஸ் விமானப்படையைச் சேர்ந்த 10 போர் விமானங்கள் 20 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதையடுத்து, நேற்றும் ரபேல் மற்றும் மிராஜ்-2000 ரகங்களை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ரக்கா நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் மற்றும் தலைமை நிலையம் அழிக்கப்பட்டதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
சிரியாவுக்கு மேலும் பல நவீனரக போர் விமானங்களை அனுப்பி உச்சகட்ட தாக்குதல் நடத்தவும் பிரான்ஸ் அதிபர் அனுமதி அளித்துள்ளதாக சமீபத்தில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply