நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை 2020 முதல் ஒழிக்கப்படும் : மங்கள சமரவீர

MANGALAஇலங்கையில் நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறைமை 2020 ஆம் ஆண்டு முதல் முற்றாக ஒழிக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரங்களை ஒழிக்கும் சட்ட நடவடிக்கையை அடுத்து வரும் 6 மாதங்களுள் நிறைவு செய்ய உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி அதனை நாடாளுமன்றத்திற்கு பெற்றுக் கொடுக்க வகை செய்யும் விஷேட பத்திரம் ஒன்றை மைத்திரிபால சிரிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் சமரப்பித்திருந்தார்.

இது சம்மந்தமான அடுத்த கட்ட நடவடிக்கைகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மேற்கொள்ளப்படும்.

நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்ட போதிலும் அது மைத்திரிபால சிரிசேனவின் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரே அமலுக்கு வர உள்ளது என வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply