பிரான்சு தாக்குதல்: தீவிரவாதிகள் தலைவன் அபாவுத் தப்பி ஓட்டம்
பிரான்ஸ் தலைநகரம் பாரீசில் கடந்த 13–ந்தேதி இரவு ஐ.எஸ். தீவிரவாதிகள் 8 பேர் பல இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 129 பேர் கொல்லப்பட்டனர். 400 பேர் காயம் அடைந்தனர். தீவிரவாதிகள் 8 பேருரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் மேலும் தீவிரவாதிகள் தங்கி இருக்கிறார்களா? என அனைத்து இடங்களிலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இந்த தாக்குதலுக்கு தலைமை ஏற்று செயல்பட்டவன் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த அப்துல் அமீது அபாவுத் (வயது 27) என்பது தெரிய வந்தது.
அவனும் கூட்டாளிகள் சிலரும் பாரிஸ் நகரின் புறநகரான செயின் டெனிஸ் என்ற இடத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை நூற்றுக்கணக்கான போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.
உடனே அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் எதிர் தாக்குதல் நடத்தினார்கள். வெடி குண்டுகளையும் வீசினார்கள். பெண் தீவிரவாதி ஒருவர் உடலில் குண்டுகளை கட்டி வெடிக்கச்செய்து உயிர் இழந்தார். மற்றொரு தீவிரவாதியை போலீசார் சுட்டுக்கொன்றனர். உள்ளே பதுங்கி இருந்த 7 பேரை கைது செய்தனர்.
கைதானவர்கள் அல்லது இறந்தவர்களில் தீவிரவாதி தலைவர் அப்துல் அமீது அபாவுத் இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், அவர்களில் அப்துல் அமீது அபாவுத் இல்லை என தெரிய வந்துள்ளது. அவன் தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
போலீசார் தாக்குதலில் தீவிரவாதிகள் தங்கி இருந்த கட்டிடம் பெரும் பகுதி இடிந்து விழுந்தது. ஒரு வேளை கட்டிட இடிபாடுகளுக்குள் அப்துல் அமீது அபாவுத் கிடக்கலாம் என கருதி தேடி வருகிறார்கள்.
ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை என்றே கருதுகின்றனர். எனவே அப்துல் அமீது அபாவுத்தை பிடிக்க நாடு முழுவதும் தொடர்ந்து தீவிர வேட்டை நடந்து வருகிறது.
பாரீஸ் நகர தாக்குதலுக்கு பிரான்ஸ்நாட்டை சேர்ந்த சலே அபே இஸ்லாம் (26) என்பவனும் காரணமாக இருந்தான். அவனும் இந்த கூட்டத்தில் இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அவனும் இங்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply