வரவு செலவுத் திட்டம் சிங்களத்தில் வாசிக்கப்பட்டமை மகிழ்ச்சி அளிக்கின்றது : மஹிந்த ராஜபக்ஸ
வரவு செலவுத் திட்ட யோசனையை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சிங்கள மொழியில் வாசித்தமை மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் எவ்வித அர்த்தமும் இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.1500 மில்லியன் ரூபா ஒரு கிராமத்திற்கு ஒதுக்கப்படுவது மிகவும் சிறந்த விடயம் என்ற போதிலும் அதற்கான பணத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பணமானது ஒரு ஊருக்கு மட்டுமன்றி தொகுதி ஒன்றுக்கே போதுமானது என அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்ட அறிக்கையை முழுமையாக தாம் வாசிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், வரவு செலவுத்திட்டத்தை சிங்கள மொழியில் வாசித்தமை பெரிய விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவற்றை எம்மால் புரிந்து கொள்ள முடியாமல் போனதே பிரச்சினையாகும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் எதிர்காலம் பற்றிய எவ்வித திட்டங்களும் உள்ளடக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply