மாயமான MH370 மலேசிய விமானத்தை தேட 14.5 மில்லியன் டாலர்களை செலவிடுகிறது சீனா

m.h.370மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி, 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, கடந்த 2014 மார்ச் மாதம் 8-ந் தேதி புறப்பட்டு சென்றது. ஆனால் 2 மணி நேரத்தில் அந்த விமானம், ரேடாரில் இருந்து மாயமானது. கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கே போனது, என்ன ஆனது என்பது தெரியவில்லை. அந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் கூட்டாக முயற்சிகள் மேற்கொண்டும், நவீன செயற்கைக்கோள் தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டும் எந்தப் பலனும் இல்லை. இருப்பினும் விமான விபத்து தொடர்பான பல்வேறு தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் அவ்வபோது வெளியாகி வருகிறது.

இந்நிலையில், அந்த விமானத்தை தேடுவதற்கு ரூ.95 கோடியை வழங்க சீனா முன்வந்துள்ளது. விமான விபத்து வரலாற்றிலேயே அதிக செலவுமிக்க தேடுதல் வேட்டையாக இது கருதப்படுகிறது. ஆசிய-பசிபிக் உச்சி மாநாட்டில் இன்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல், மற்றும் சீன பிரதமர் லீ கிகியாங் ஆகியோர் சந்தித்த போது இந்த அறிவிப்பு வெளியானது.

மாயமான அந்த மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களில் 3-ல் இரு பங்கு சீனாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply