ஐ எஸ் அமைப்பை ஒழித்துக்கட்ட ஐ நா உறுதி
இராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஐ எஸ் அமைப்பை ஒடுக்கி ஒழிப்பதற்கு ஐ நா பாதுகாப்பு சபையில் ஒருமனதாக தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.அந்த அமைப்பை ஒழிப்பதில் பாதுகாப்பு சபையிலுள்ள உறுப்பு நாடுகளின் கூட்டு முயற்சியில் எவ்வித சுணக்கமும் இருக்காது என அச்சபையின் தலைவரும் ஐ நாவுக்கான பிரிட்டிஷ் தூதருமான மேத்யூ ரைகிராஃட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஐ எஸ் அமைப்பின் கொடூரங்களுக்கு ஒரு அளவில்லை எனவும் அவர் கூறுகிறார்.
உலகெங்கும் தாக்குதல் நடத்துவது என ஐ எஸ் அமைப்பு உறுதிபூண்டுள்ளதை எதிர்த்துப் போராடாடி அவர்கள் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து ஒழித்துக் கட்டுவதில் உலக நாடுகளுகளிடையே கூடுதல் உறுதியும் ஒத்துழைப்பும் தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.உலக அளவில் ஐ எஸ் அமைப்பால் அச்சுறுத்தல் உள்ளது என்பதை சர்வதேச நாடுகள் முழுமையாக அங்கீகரித்துள்ளதன் விளைவே அவர்களை ஒழிக்க ஐ நா பாதுகாப்பு சபை நிறைவேற்றியுள்ள ஆணித்தரமான தீர்மானம் என அதன் தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஐ எஸ் மட்டுமல்ல இதர பயங்கரவாதக் குழுக்களை ஒடுக்கி ஒழிக்க ஐ நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது எனக் கூறும் மேத்யூ ரைகிராஃப்ட், ஐ எஸ் அமைப்பு மனித உயிர்களை மதிக்கவில்லை என்பதை ஐ நா உறுப்பினர்கள் உணர்ந்துள்ளனர் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஐ எஸ் அமைப்பின் நிதிக்கட்டமைப்பை முற்றாக ஒழிக்கவும் ஐ நா உறுதிபூண்டுள்ளது எனவும் மேத்யூ ரைகிராஃப்ட் ஐ நா தீர்மானத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply