பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய பெல்ஜிய நபர் துருக்கியில் கைது

parisபிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பெல்ஜிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவரை துருக்கி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அகமது டாஹ்மனி (வயது 26) என்பவர் பாரீஸ் நகர தாக்குதலில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இதனை நாங்களே செய்தோம் என ஐ.எஸ். ஜிஹாதி அமைப்பினர் முன்பு கூறியிருந்தனர்.

மொராக்கோ நாட்டு பூர்வீகத்தை கொண்ட அகமது, சிரிய நாட்டின் எல்லைக்குள் நுழைவதற்கு சிரியா நாட்டை சேர்ந்த 2 பேர் உதவி புரிந்துள்ளனர். இந்நிலையில் இது பற்றி வெளியாகியுள்ள அறிக்கை ஒன்றில், கடந்த நவம்பர் 16ந்தேதி அன்டல்யா விமான நிலையத்தில் வந்து இறங்கிய அகமதுவை தீவிரவாத எதிர்ப்பு போலீசார் பின் தொடர்ந்துள்ளனர். அதன்பின் அகமது, நகரின் கிழக்கே மானவ்கட் பகுதியில் அமைந்த ஆடம்பர வசதி கொண்ட 5 நட்சத்திர ஓட்டலுக்குள் சென்றுள்ளார். இதனை அடுத்து அகமதுவையும் அவருடன் இருந்த 2 சிரிய நாட்டினரையும் போலீசார் கைது செய்தனர்.

அகமதுவிற்கு போலி பாஸ்போர்ட்டு வழங்கி, ஜிகாதி கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவிற்கு பாதுகாப்புடன் அகமதுவை கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள அவர்கள் இருவரிடமும் ஐ.எஸ். தலைமை உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவர்கள் எப்பொழுது கைது செய்யப்பட்டனர் என்பது குறித்து தெளிவுடன் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் 3 பேரும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள் கலந்து கொண்ட வருடாந்திர ஜி20 மாநாடு பலத்த பாதுகாப்பின் கீழ், தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் நடந்தது. ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள வட சிரிய பகுதிக்கு ஜிகாதிக்கள் பலர் துருக்கி எல்லையை பயன்படுத்தி செல்கின்றனர் என மேற்கத்திய நாடுகள் துருக்கி நாட்டின் மீது நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றன.

எனினும், சமீபத்திய வாரங்களில் துருக்கி எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் அதிகாரிகள் கவனமுடன் ஈடுபட்டு வருகின்றனர். அதனுடன், ஐ.எஸ். அமைப்பில் சேர செல்கின்ற தீவிரவாதிகளை தினமும் எல்லை பகுதியில் வைத்து கைது செய்தும் வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply