பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: பாரீசில் நவ.30 வரை பொதுக் கூட்டங்கள் நடத்த தடை நீட்டிப்பு
பாரீசில் பருவநிலை மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு நவம்பர் 30-ம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் நடத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பிரான்சிஸ் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த வியாழக்கிழமை அவசர நிலை பிரகடனம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு சோதனைகளையும் அந்நாட்டு போலீசார் அதிரடியாக மேற்கொண்டனர்.
இந்நிலையில், தலைநகர் பாரீசில் பருவநிலை மாநாடு இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பொதுக் கூட்டங்கள் நடத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஏற்கனவே இரண்டு பொதுக்கூட்டங்களுக்கு அந்நாட்டு போலீசார் தடை விதித்துள்ளனர். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த முக்கியமான மாநாடு நடைபெறவிருப்பதால் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு அரசு தெரிவித்துள்ளது.
பிரான்சில் நடைமுறையில் உள்ள அவசர நிலை பிரகடனம் பத்திரிக்கை சுதந்திரத்தை கட்டுப்படுத்தாது, இருப்பினும் இணைய தளங்கள் அல்லது சமூக வலைதளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுவதை அரசு கட்டுப்படுத்தும். மேலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply