மியான்மர் நாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானவரின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு: 100 பேரை காணவில்லை
மியான்மர் நாட்டின் வட பகுதியில் கக்சின் மாகாணம் உள்ளது. இங்குள்ள மலைப் பகுதிகளில் பச்சை மாணிக்க கல் சுரங்கங்கள் உள்ளன. இங்கு விலை உயர்ந்த பச்சை மாணிக்க கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு ஆண்டுக்கு கோடி வருமானம் ஈட்டப்படுகிறது. சுரங்கங்களில் மணலூடன் வெட்டி எடுக்கப்படும் பச்சை மாணிக்க கற்கள் சல்லடை மூலம் சலிக்கப்பட்டு பிரித்தெடுக்கும் பணியில் ஏராளமான கிராம மக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மலைச் சரிவில் குவித்து வைக்கப்பட்டிருந்த மாணிக்க கல் தாதுக்களை சலிக்கும்பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கி ஏராளமானவர்கள் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தனர்.
தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மண்ணில் புதைந்து கிடந்தவரை மீட்டனர். அவர்களில் 60 பேர் உயிரிழந்தனர். இவர்கள் தவிர இன்னும் 100 பேரை காணவில்லை என தெரிய வந்துள்ளது.
அவர்களும் மண்ணுக்குள் உயிருடன் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மரில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply