பல தமிழ் அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது

Government-Gazetteதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கியதாக தெரிவித்து 8 அமைப்புகள் மற்றும் 155 நபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை வர்த்தமானி மூலம் நீக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனேடியன் தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலியன் தமிழ் காங்கிரஸ் உட்பட எட்டு அமைப்புக்களில் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள், நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, மற்றும் ஏனைய சில அமைப்புகள் மீதான தடை தொடரும் என நேற்று வெள்ளிக்கிழமை இரவு அரசு வெளியிட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply