திருமலையில் உணவு நஞ்சானதால் ஒருவர் மரணம்; சுமார் 107பேர் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலையிலுள்ள அனைத்து வெதுப்பகங்களும் பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளன. வெதுப்பகமொன்றிலிருந்து கொள்வனவு செய்த பொருள்களை உட்கொண்ட 107 மாணவர்கள் சுகவீனமுற்றதைத் தொடர்ந்தே அனைத்து வெதுப்பகங்களும் சீல் வைக்கப்பட்டள்ளன.
வெதுப்பகமொன்றில் கொள்வனவு கொள்வனவு செய்த பாணை உற்கொண்ட திருகோணமலை திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து திருகோணமலையிலுள்ள பாடசாலைகளில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டதுடன், பெற்றோர் தமது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வைத்தியசாலைகளுக்குச் சென்றுள்ளனர்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களில் 107 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதுடன், 4 மாணவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம்  கூறினார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் திருகோணமலையிலுள்ள அனைத்து வெதுப்பகங்களையும் மூடி சீல்வைத்துள்ளனர்.

எனினும், அச்சமடைந்த மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதால் திருகோணமலை நகரில் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பதற்றம் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறு உணவு விஷமானது என்பதைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்மிடம் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply