நான்கு நாடுகளில் இலங்கையர்களுக்கான புகலிடம் மறுப்பு

refugeபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து இலங்கை, சூடான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு புகலிடம் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் போல்கன் பிராந்தியத்தில் உள்ள மெஸிடோனியா, குரோஷியா மற்றும் சேர்பியா உட்பட நான்கு நாடுகளில் இலங்கையர்களுக்கான புகலிடம் மறுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மெஸிடோனியாவுக்கு இலங்கை, சூடான், ஸைபீரியா, கொங்கோ மற்றும் பாகிஸ்தானிலிருந்து புகலிடம் கோரி வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சேர்பியாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் மெலிடா சுன்ஜித் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கள் நாடுகளுக்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களால் அந்த நாட்டு மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், அவர்களுடன் ஆயுதக் குழுவினரும் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் தாக்குதலின் பின் அந்த அச்சம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் மெலிடா சுன்ஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply