அக்னி-1 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா
ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து உள்ளது. இந்தியாவிடம் ஏற்கனவே பிருதிவி, ஆகாஷ், நாக், திரிசூல், அக்னி ஏவுகணைகள் உள்ளன. அக்னி ரக ஏவுகணைகளில் அக்னி௧ ஏவுகணை 700 கிலோ மீட்டர் தூரமும், அக்னி௨ ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தூரமும், அக்னி௩ ஏவுகணை 2,500 கி.மீ. தூரமும், அக்னி௪ ஏவுகணை 3,500 கி.மீ. தூரமும் சென்று தாக்க வல்லவை. இந்த நிலையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள அக்னி௧ ஏவுகணை சோதனை இன்று நடத்தப்பட்டது. ஒடிசா கடற்கரையில் எதிரிகளின் ஏவுகணை வான்பரப்பிலேயே வழிமறித்து தாக்க வல்ல இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றிரமாக இருந்தது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply