பிரதமர் மோடி பாரிஸ் சென்றடைந்தார் உச்சகட்ட பாதுகாப்பு
பருவகால மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஐக்கியநாடு சபை சார்பில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று புது டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பாரிஸ் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு உலக தலைவர்கள் இந்த மாநாட்டிற்கு வரவுள்ளதால் இங்கு உச்சக்கட்ட பாதுகாப்புக்கு பிரான்ஸ் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பருவகால மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு நடக்கிறது. உலக அளவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு, மற்றும் நாடுகள் இடையிலான உறவு ஆகியன குறித்து விவாதிக்கப்படுகிறது இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜப்பான், சீனா , இந்தியா பிரதமர்கள் உள்பட 140 க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர் .டிசம்பர் 11-ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
இதற்கென டெல்லியில் இருந்து பாரிஸ் புறப்பட்டு சென்றுள்ள மோடி, மாநாட்டின் இடையே ஒபாமா, ஜிங்பிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை தனியாக சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் பாரிசில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பாரிசுக்கு உலக தலைவர்கள் பலர் வரவிருப்பதால் அங்கு பாதுகாப்பு முழு அளவில் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் ராணுவம் மற்றும் போலீசார் உள்பட ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply