சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வதற்கு தாம் தயார் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் :அருட்தந்தை இமானுவல் அடிகள்
ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையான தமிழீழத்தினை கைவிட்டு விட்டதாக உலகத் தமிழர் பேரவை கடந்த ஆண்டு அறிவித்திருந்த நிலையில் அந்த அமைப்பின் மீதான சிறிலங்காவின் தடை சில நாட்களுக்கு முன்னர் நீக்கபட்டது. சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்குள் பரந்துபட்ட அதிகார பகரிர்வுடன் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வதற்கு தாம் தயாரென சமீபத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகள் மற்றும் அந்த அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர், அருட்தந்தை இமானுவேல் அடிகள் இலங்கை வருகை தரவுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் அவரது வருகையை அரசு மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சர்வமதத் தலைவர்கள் ஊடாக இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு ஒன்றினைக் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இன்றைய அரசாங்கத்தின் முயற்சியில் தமிழ்த் தரப்பின் சார்பில் அருட்தந்தை இமானுவேல் மிக முக்கிய வகிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இலங்கை வருகை தரவுள்ள அருட்தந்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத் தரப்பிற்குமிடையில் இணைப்பாளராக இருந்து செயற்படும் அதேவேளை ஏனைய மதத் தலைவர்களுடனும் கலந்துரையாடி அவர்களுடனும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இணைந்து செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply