அரசியல் நடத்த முற்பட்டால் ஓரங்கட்டப்படுவார்கள் : இரா.சம்பந்தன்

sampanthanவடக்கு கிழக்கில் எவராவது அடிப்படை வாதத்தின் ஊடாக தமது அரசியல் நிலைப்பாட்டை ஏற்படுத்த முயற்சித்தால் அவர்கள் மக்களால் ஓரங்கட்டப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நீண்டகாலமாக பாரிய அழிவுகளுக்கு முகங்கொடுத்த வடக்கு, கிழக்கு மக்கள் தமது வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் மீளவும் இடம்பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் எவராவது அடிப்படைவாதத்தின் ஊடாக தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மா னித்தால் அவர்களுடைய நிலைமை துரதிஷ்டவசமான தாக வே அமையும் என்றும் அவர் கூறி னார்.

 

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் போட்டியிட்ட அடிப்படை வாதிகள் சகலரும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாத்திரமன்றி தெற்கிலும் அடிப்படைவாதிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்பது கடந்த பொதுத் தேர்தலின் மூலம் உணர்த்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

 

வரவுசெலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.

 

முரண்பாடுகளைத் தோற்றுவித்து அதனூடாக சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என பாராளுமன்றத்தில் உள்ள எவராவது கருதினால், அவ்வாறான பாதையை கைவிடவேண்டும். அதேபோல அடிப்படை வாதத்தைத் தூண்டி அதனூடாக தமது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு தற்பொழுது எந்த நிலையில் இருந்துகொண்டு யாராவது முயற்சித்தாலும் அவர்கள் மக்களால் ஓரங்கட்டப்படுவார்கள் என்றும் கூறினார்.

 

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டி ருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை போதுமானதாக இல்லையெனச் சுட்டிக்காட்டிய அவர், இவர்களின் விடுதலையானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனக் கூறி மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக சிலர் சுயநல அரசியல் செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

 

இவ்வாறானவர்களின் முயற்சிகளுக்கு இடமளிக்காது கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

 

பயங்ரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ள நிலையில் இன்னமும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் விடுதலை விவகாரமானது அரசியல் ரீதியான தீர்மானமாகும். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜே.வி.பியினர் மற்றும் சரத்பொன்சேகா ஆகியோர் கூறியுள்ளனர்.

 

இவ்வாறான பின்னணியில் கைதிகளின் விவகாரம் சட்டத்துக்கும் அப்பால் அரசியல் தீர்மானத்தில் தங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். சிறைகளில் உள்ள பெரும்பாலானவர்கள் நீதிமன்றத்தால் வழங்கப்படக்கூடிய சிறைத் தண்டனைக் காலத்தையும் விட கூடுதலான காலத்தை சிறைகளில் கழித்திருப்பதால் அவர்களை நேரடியாக விடுதலை செய்ய முடியும்.

 

பிரிக்கப்படாத இலங்கைக்குள் ஏனைய மக்களுக்கு சமமாக வாழ்வதற்கு விரும்புவதாக வடக்கு, கிழக்கு மக்கள் ஜனநாய ரீதியாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிலையில் நாட்டில் நீண்டகால சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply