நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதல்: 3 பேர் பலி

Nigeriaநைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு போர்னோ மாகாணத்தில் இவர்களின் தாக்குதல் தீவிரமாக உள்ளது. பியூ மாவட்டம் சபான்காரி கிராமத்தில் ராணுவ சோதனை சாவடி உள்ளது. இது போர்னோ மாகாண தலைநகர் மைதுகுரியில் இருந்து 180 கி.மீ. தூரத்தில் உள்ளது. அங்கு வந்த 2 தற்கொலை படை தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தனர்.

அதில் அங்கிருந்த 2 பொது மக்கள் பலியாகினர். 4 பேர் காயம் அடைந்தனர். மேலும் ஜிம்பா கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை படை தீவிரவாதி குண்டை வெடிக்கச் செய்தான்.

அதில் ஒருவர் பலியானார். 2 பேர் காயம் அடைந்தனர். மற்றொரு சம்பவத்தில் சோதனை சாவடியில் தற்கொலை படை பெண் தீவிரவாதி தாக்குதல் நடத்த முயன்ற போது அவளை ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply