15 ஆயிரத்துக்கும் அதிகமானோரை மீட்டது ராணுவ மீட்புக் குழுக்கள்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை ராணுவ மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் சார்பில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மற்றும் இராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ராணுவத்தினர் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 7 ஆயிரம் பேர் படகு மூலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் மூலம் 9 பேரை ராணுவ மீட்புக் குழு மீட்டுள்ளதாகவும் கூடுதல் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தை சேர்ந்த 60 மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் ராணுவத்தால் 4 மருத்துவ குழுக்கள் உடனடி நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply