ஹெச்.டி.எப்.சி வங்கியை தொடர்ந்து கடன்களுக்கான அபராதத்தை ரத்து செய்த ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்.பி.ஐ
சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக வங்கிகள், பல்வேறு கடன்களுக்கான நவம்பர் மாத தவணைத் தொகையை எவ்வித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், எச்.டி.எப்.சி வங்கியைத் தொடர்ந்து, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் தங்களது சென்னை வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, இருசக்கர வாகனம், வீட்டுமனை கடன்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைக்கு நவம்பர் மாத தவணை தொகை கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டாலும், அதனை எவ்வித அபராதமின்றி செலுத்தலாம். மேலும், வங்கிகளில் வாடிக்கையாளர்களின் காசோலைகள் பணமின்றி திரும்பினாலும் அதற்கும் எவ்வித அபராதமும் வசூலிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.
இதேபோல் அரசு வங்கியான எஸ்.பி.ஐ-யும், தனி நபர் கடன் உட்பட பல்வேறு கடன்களுக்கான நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான மாத தவணை தொகையை தாமதமாக செலுத்தினாலோ அல்லது செலுத்த முடியாமல் போனாலோ அதற்காக எந்த அபராதமும் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply