படையினர் இன்னும் இரண்டு கிலோ மீற்றர் முன்னோக்கிச் சென்றால் பாதுகாப்பு வலயத்தை அடைந்து விடுவர்
படையினர் இன்னும் இரண்டு கிலோ மீற்றர் முன்னோக்கிச் சென்றால் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்படும் பாதுகாப்பு வலயத்தை அடைந்து விடுவர். இந்நிலையில் பாதுகாப்பு வலயத்தை அண்டிய பகுதிகளில் இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.
மோதல்கள் தொடர்பில் இராணுவ பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது, வன்னிப் போர் நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள படையினர் தற்போது சுமார் 25 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் சிக்குண்டுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்களைத் தேடுவதற்கான போர் முன்னெடுப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply