தானும் உதவாமல், மற்றவர்களையும் உதவி செய்ய விடாமல் அதிமுக தடுக்கிறது: கலைஞர் குற்றச்சாட்டு

karunaதிமுக தலைவர் கலைஞர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, அண்ணா அறிவாலயத்திற்கு இன்று காலையில் பல்வேறு லாரிகளின் மூலமாக வந்த வெள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அவைகளை கலைஞர் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

செய்தியாளர்:- அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில், வெள்ள நிவாரணப் பொருள்களையெல்லாம் தடுக்கிறார்கள். தொண்டு நிறுவனத்தினர் கொண்டு வருகின்ற பொருள்களையெல்லாம் தடுத்து அதிலே முதலமைச்சர் ஜெயலலிதாவின் படங்களை ஒட்டி அனுப்புகிறார்கள். இதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கலைஞர் :- இதைப் பற்றி நான் ஒன்றும் நினைக்கவில்லை. இப்படி நடந்து கொள்வது என்பது அவர்களுடைய சுபாவத்தைக் காட்டுகிறது. அவர்களும் உதவி செய்ய மாட்டார்கள். இரக்கம் கொண்டு உதவி செய்பவர்களின் பணிகளையும் அவர்கள் ஒழுங்காகச் செய்ய விட மாட்டார்கள். அது தான் அவர்கள் (அ.தி.மு.க.).

செய்தியாளர்:- நீங்கள் கேட்டுக் கொண்டவாறு, இங்கே நிவாரணப் பொருள்கள் ஏராளமாக வந்து இறங்கியுள்ளது. தி.மு. கழகத்தினர் வெள்ள நிவாரணப் பணிகளை எந்த அளவுக்குச் செய்திருக்கிறார்கள்?

கலைஞர் :- தேவையான அளவுக்கு, எங்கேயும் புறக்கணிக்காமல், அரசியல் கலக்காமல், மனிதாபிமான உணர்வோடு செய்ய வேண்டிய நிவாரணப் பணிகளை யெல்லாம் தி.மு. கழகத் தொண்டர்கள் செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் :- அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டு மென்று நீங்களும் மற்ற எதிர்க் கட்சியினரும் கேட்டுக் கொண்டவாறு, இந்த அரசினர் கூட்டவில்லை. வெள்ள நிவாரண உதவிகளை அளிக்கவும், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுக்களை அமைக்கப்படும் என்று கூறவில்லையே?

கலைஞர் :- அது தான் இந்த அரசு! (அ.தி.மு.க. அரசு).

இவ்வாறு பதிலளித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply