மர்ம அழைப்பால் மாண்ட்ரியலுக்கு திருப்பி விடப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பாரிஸ் சென்று கொண்டிருந்த விமானம் மர்ம நபர்களின் மிரட்டல் அழைப்பால் திருப்பி விடப்பட்டுள்ளது. இது குறித்து ஏர் பிரான்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 83 பயணிகளுடன் பாரிஸ் சென்று கொண்டிருந்த விமானம், மர்ம நபர்கள் மிரட்டல் அழைப்பு விடுத்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனடாவின் மாண்ட்ரியல் நகருக்கு திருப்பி விடப்பட்டதாக் தெரிவித்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்தி வரும் கனடா நாட்டு அதிகாரிகள், பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை பரிசோதித்தனர். பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக ஏர் பிரன்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 13-ம் தேதி பாரிசில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலையடுத்து, தற்போது வரை பிரான்சில் அவசரநிலை பிரகடனம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply