அநாதையாக நிற்கும் ஜெட் விமானங்களின் உரிமையாளர் யார் என்று தெரியாமல் தவிக்கும் மலேசியா

FILIETமலேசியாவின் முதன்மை விமான நிலையமான கோலாலம்பூர் விமான நிலையத்தில் 3 கார்கோ ஜெட் விமானங்கள் உரிமை கோர ஆளின்றி அநாதையாக நிற்பதால், அதைக் கண்டுபிடிக்க விமான நிலைய அதிகாரிகள் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துள்ளனர். த ஸ்டார் அண்ட் சின் சூ என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ள அந்த விளம்பரத்தில், “ TF-ARM, TF-ARN, TF-ARH என்ற பதிவு எண் கொண்ட 3 போயிங் 747 -200F ரக விமானங்கள் எங்கள் விமான நிலையத்தில் உள்ளது. இன்னும் 14 நாட்களுக்குள் இதன் உரிமையாளர் வந்து விமானத்தை கொண்டு செல்லவில்லையென்றால், இந்த விமானங்களை விற்பதற்கும் அப்புறப்படுத்துவதற்கும் எங்களுக்கு உரிமை உள்ளது என்பதை இந்த விளம்பரத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். உரிமையாளர் வரும் பட்சத்தில், விமானத்திர்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது.

விமானத்தை தொடர்ந்து இயக்குவதற்கான பணம் இல்லாததே இப்படி விட்டுச் சென்றதற்கு காரணமாக இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் கருதுகின்றனர். அதே நேரம், 21-ம் தேதிக்குள் விமானத்தின் உரிமையாளர் வர வில்லையென்றால் விமானங்களை ஏலம் விட்டு விடுவோம் அல்லது எடைக்கு போட்டு விடுவோம் என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply