ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் துருக்கியின் கள்ளத்தொடர்பு: அம்பலப்படுத்தச் சென்ற ரஷிய செய்தியாளர்கள் நாடு கடத்தல்

turkyதுருக்கியில் நடைபெற்றுவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கள்ளச்சந்தை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ரஷிய செய்தியாளர்களை அங்கிருந்து நாடு கடத்தப்பட்டனர். சிரியா எல்லையில் ரஷியா போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து இருநாடுகள் இடையே பனிப்போர் ஏற்பட்டு உள்ளது. இச்சம்பவத்தை அடுத்து சிரியாவை சுற்றிலும் ரஷியா பாதுகாப்பு அரணை ஏற்படுத்தி, ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அதிரடியாக தாக்குதல் நடத்திவருகிறது. சிரியா மற்றும் ஈராக்கில் எடுக்கப்படும் எண்ணெய் பொருட்களை துருக்கியில் கள்ளச்சந்தையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் விற்று வருகின்றனர் என்று ரஷியா புகைப்படுத்துடன் உறுதிபடுத்தியது. கடந்த ஆண்டு அமெரிக்காவும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தது. இருப்பினும் துருக்கி மறுத்து வருகிறது.

இதனையடுத்து துருக்கிக்கு ஆயில் கடத்தப்படுவதை நிர்மூலமாக்க திட்டமிட்ட ரஷியா அதன்படி தாக்குதலையும் நடத்திவருகிறது.

இந்நிலையில் துருக்கியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கள்ளச்சந்தையில் ஆயில் விற்பனையில் ஈடுபடுவது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ரஷிய செய்தியாளர்களை துருக்கி கைதுசெய்து நாடு கடத்தியது.

ரஷியா செய்தி சேனல் சிறப்பு செய்தியாளார் அலெக்சாண்டர் தலைமையிலான செய்தியாளர்கள் குழு தென்கிழக்கு துருக்கியில் விசாரணையில் ஈடுபட்டபோது, பொதுமக்களை போன்று வந்த பாதுகாப்பு படையினர் அவர்களை கைதுசெய்தனர். இதனையடுத்து அவர்கள் துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்டனர் என்று ரஷியா டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

துருக்கியின் செயலுக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ”துருக்கி அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். மீடியா மீதான இதுபோன்ற நடவடிக்கையானது முற்றிலும் ஏற்றுக் கொள்ளமுடியாதது,” என்று ரஷியா வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply