பிரபாகரனை கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் : மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். நிருபர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக மதுரையில் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு 3 பத்திரிகையாளர்கள் இறந்துள்ளனர்.


கடந்த வருடம் தேவர் ஜெயந்தியின் போது அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டார். இந்த வருடம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கப்பட்டுள்ளார்.

அதற்கடுத்து உசிலம்பட்டி அருகே புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு பத்திரிகை அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

விடுதலைப் புலிகளிடம் இருந்து அப்பாவித் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி விடுதலைப் புலிகள் போர் புரிந்து வருகிறார்கள். பிரபாகரனை கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசை கேட்டுக் கொள்கிறேன்.

சமீபத்தில் கைது செய்யப்பட்ட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ஏதோ விடுதலைப் போராட்ட வீரர்களைப் போல் வரவேற்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காக போராடும் இவர்கள் இங்கு போராடுவதை விட்டுவிட்டு இலங்கையில் போய் போராட வேண்டியதானா?

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்று கேட்டோம். இப்போதும் சிலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் திமுக அமைச்சரவையில் காங்கிரசுக்கு பங்கே வேண்டாம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply