சல்மான் கான் விடுதலை: போதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

salmanபோதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம். மும்பையில் உள்ள பாந்திரா பகுதியில் கடந்த 28௯௨002 அன்று தனது நண்பர்களுடன் நடிகர் சல்மான்கான், மதுபோதையில் வேகமாக காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதில் சாலையோரம் படுத்து தூங்கிக் கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் சல்மான்கானின் கார் ஏறி இறங்கியதில் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை செசன்சு நீதிமன்றம் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, உடனடியாக மும்பை உயர் நீதிமன்றத்தில் சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். செசன்சு நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறுத்தி வைத்து சல்மான் கானுக்கு ஜாமின் வழங்கிய உயர் நீதிமன்றம் அவரது மனு மீதான விசாரணையை துவங்கியது.

மேல்முறையீட்டு மனு மீதான வாதம் முடிவடைந்ததை அடுத்து இன்று முழுமையான தீர்ப்பு வெளியாகியுள்ளது.

நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி தனது தீர்ப்பில், “சல்மான் கானுக்கு எதிராக அரசு தரப்பிலும், மனுதாரார் தரப்பிலும் சமர்ப்பிக்கபட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. முக்கிய சாட்சியான சல்மான் கானின் பாதுகாவலரின் வாக்குமூலம் முற்றிலும் நம்பகமானது இல்லை.

மேலும் சல்மான் கான் தான் காரை ஓட்டினார் என்பதோ, அவர் மது போதையில் இருந்தார் என்பதோ சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை விடுவிப்பதுடன், மும்பை செசன்சு நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது ஜாமினில் இருக்கும் சல்மான் கானுக்கு இந்த தீர்ப்பு அளவற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply