இத்தாலியில் விமானி இல்லாததால் முடங்கி கிடக்கும் பிரதமர் விமானம்

italyஇத்தாலி பிரதமராக மாட்டியோ ரென்சி பதவி வகிக்கிறார். இவர் வெளிநாடுகள் சுற்றுப் பயணத்தின் போது ‘ஏ319’ ரக விமானத்தை பயன்படுத்தி வந்தார். அது சிறியதாக இருந்ததால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் இருந்து ‘ஏர்பஸ் ஏ340,500’ என்ற விமானம் வாடகைக்கு வாங்கப்பட்டது. அதற்கு மாதம் ரூ.10 லட்சம் (1 மில்லியன்) வாடகை தரப்படுவதாக தெரிகிறது. இந்த விமானம் கடந்த அக்டோபர் மாதம் ரோம் நகருக்கு வந்தது. அங்கு அந்த விமானத்தில் கழிவறை மற்றும் மாநாட்டு அறை போன்றவை புதிதாக உருவாக்கப்பட்டது.

அதில் விசேஷம் என்னவென்றால் அதிநவீன இந்த சொகுசு விமானத்தை இயக்க இத்தாலி விமானப்படையில் விமானி இல்லை. இதனால் அந்த விமானம் இயக்கப்படாமல் அப்படியே முடங்கி கிடக்கிறது.

அதே நேரத்தில் விமானத்துக்கு தேவையின்றி மாதம் ரூ.10 லட்சம் வாடகை வழங்கப்பட்டு வருவதாக இத்தாலி மக்கள் ஆதங்கப்படுகின்றனர். இதற்கிடையே அந்த விமானத்தை ஓட்ட இத்தாலியில் விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply