2020 இல் இலங்கை கண்ணிவெடிகளற்ற நாடாக மாறும்

kanniஇலங்கையில் போர் இடம்பெற்ற வடக்கு பகுதிகளில் சுமார் 200,000 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், 2020ஆம் ஆண்டு இலங்கை கண்ணிவெடிகளற்ற நாடாக மாறும் என உலகில் மிகப்பெரிய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம்,நேற்று தெரிவித்துள்ளது.”இலங்கையை முற்று முழுதாக கண்ணிவெடிகள் அற்ற நாடாக 2020ஆண்டளவில் மாற்றுவதே எமது இலக்கு” என ஹலோ ட்ரஸ்ட் அமைப்பின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாகவும் நிதி கிடைக்காமையே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், 90சதவீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்துக்கு தயாராக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காடுகள் மற்றும் சில வயல் பிரதேசங்களில் மாத்திரம் கண்ணி வெடிகள் அகற்றப்படவேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை இந்திய ஆங்கில முன்னணி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply