வெளிநாட்டு தூதரகங்கள் சில மூடப்பட உள்ளன:வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர
சில நாடுகளில் இயங்கி வரும் இலங்கைக்கான தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் மூடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். சில நாடுகளில் வதிவற்ற தூதுவர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு தேவையற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள தூதரகங்களை குறைப்பதனாலும் மாற்று வழிகளை பயன்படுத்துவதனாலும் செலவுகளை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜதந்திர சேவைகள் நாட்டுக்கு காத்திரமானதாகவும் பயனுள்ள வகையிலும் அமையக்கூடியதாக வடிவமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகள் ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தைப் போன்று ஒரு சிலரின் அடிமடிகளை நிரப்பிக் கொள்வதற்காக வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply