உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் ஜனாதிபதி

maithiriஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அனைத்து தரப்பினதும் உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயத்தின் போது பிரதிபலிக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் வெற்றிகள் அல்ல என தெரிவித்துள்ள ஜனாதிபதி மாறாக மக்களின் பொதுவான எதிர்பார்ப்புக்களே எனவும் சுட்டிகாட்டியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது பெண்கள் போட்டியிடுவதை கட்டாயப்படுத்த எதிர்பார்த்திருப்பதனால் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பிலான சர்வகட்சி கூட்டம் நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply