ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க மேலும் படைகளை அனுப்ப முடியாது: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் திட்டவட்டம்

angelaசிரியா மற்றும் ஈராக்கில் சில பகுதிகளை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளின் படை வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. பாரிஸ் தாக்குதலை அடுத்து இந்த தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியும் தாக்குதலை தீவிரப்படுத்த தொடங்கி உள்ளது. முதல்கட்ட ஜெர்மன் படைகள் துருக்கி சென்றுள்ளன. இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக மேலும் அதிகமான படையை களமிறக்குமாறு ஜெர்மனியை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது என்று தகவல்கள் வெளியாகின.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடிவரும் உள்நாட்டு குர்திஷ் படையினருக்கு கடந்த ஆண்டில் இருந்தே ஜெர்மனி ஆயுத உதவிகளை செய்து வருகின்றது. தற்போதைய நிலவரப்படி, ஆறு டொர்னாடோ போர் விமானங்கள், பிரான்ஸ் நாட்டின் விமானம்தாங்கி போர்க்கப்பலை பாதுகாக்கும் படைகள், வானத்தில் பறக்கும் போர் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் வல்லமை கொண்ட விமானம் மற்றும் 1,200 காலாட்படைகளை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஜெர்மனி களமிறக்கியுள்ளது.

இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக மேலும் அதிகமான படையை களமிறக்குமாறு ஜெர்மனியை அமெரிக்கா வலியுறுத்தியதாக வெளியான செய்திகள் தொடர்பாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்-லிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தனது பங்களிப்பை ஜெர்மனி சரியாக நிறைவேற்றி வருவதாக நான் நம்புகிறேன். உங்களது கேள்வி தொடர்பான புதிய விவகாரங்களைப் பற்றி நாம் தற்போது பேச வேண்டிய அவசியமில்லை’ என கூறியுள்ளார்.

இதையடுத்து, ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க மேலும் படைகளை அனுப்ப முடியாது என ஏஞ்சலா மெர்க்கெல் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக ஜெர்மனி நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply