ரம்போடை நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இரு பெண்கள் மாயம்

rampeddaiரம்போடை நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இரு பெண்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.சிலாபம் பகுதியைச் சேர்ந்த இவர்கள் நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று, பின்னர் மீண்டும் திரும்புகையில் ரம்போடை நீர்வீழ்ச்சிக்கு சென்று ​வேளையே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் இவ்வாறு விபத்துக்கு முகம் கொடுத்தவர்கள் சிலாபம் – முகுனுவடவன பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 33 வயதான இரு பெண்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply