சோதிடத்தை நம்பியே தோல்வியுற்றார் மகிந்த :ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ் வெல் பரணகம

MARKSசோதிடத்தில் நம்பிக்கை வைத்துத் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வி கண்டார். அதனை மறந்து விட வேண்டாம். கடவுளை மட் டுமே நம்புங்கள் என்று காணாமற் போனவர்களின் உறவினர்களுக்கு அறிவுரை கூறினார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ் வெல் பரணகம. பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று 3 ஆவது நாளாகவும் காணாமற் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்காக வருகை தந்திருந்த புதுக்குடியிருப்பு முத்தையன் கட்டுப்பகுதியினைச் சேர்ந்த தாயயாருவர் தனது மகன் காணாமற்போனமை தொடர்பில் சாட்சியமளித்திருந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு, 17 வயதில் எனது மகன் கிருஸ்னன் காணமற்போயிருந்தார்.

இது தொடர்பில் எல்லா இடங்களிலும் முறைப்பாடுகளை பதிவு செய்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எப்படியாவது எனது மகனை கண்டுபிடித்து தாருங்கள் என்று அந்த தாய் உருக்கமாக ஆணைக்குழுவின் தலைவரிடத்தில் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு கேட்ட தாயிடம் ஆணைக்குழுவின் தலைவர் மைக்ஸ்வெல் பரணகம, உங்களுடைய மகன் உயிருடன் இருக்கின்றார் என்று நம்புகின்றீர்களா? ஏன கேட்டார். இதன் போது அந்த தாய் மகன் காணாமற்போகும் போது 17 வயது தான். அவனைத் தேடி களைத்து போய் கடைசியாக சோதிடர் ஒருவரிடம் கேட்ட போது, அவன் உயிருடன் தான் இருக்கின்றான் என்று சொல்லியிருந்தார்.

இதனால் எனது மகன் இப்போதும் உயிருடன் தான் இருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறினார். இதன்போது, தாயியையும் அங்கு இருந்த ஊடகவியலாளர்களையும் பார்த்து ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம, சோதிடத்தை நம்புகின்றீர்கள். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலின் போது சோதிடத்தை நம்பியிருந்தே தோற்றுப்போனார். சோதிடத்தை நம்பாதீர்கள். கடவுளை மட்டுமே நம்புங்கள் என குறிப்பிட்டார்.

காணமற்போனவர்களுடைய உறவுகள் சோதிடங்களை நம்பி தமது பிள்ளைகள் உயிருடன் தான் இருக்கின்றார்கள் என்று எண்ணக் கூடாது. ஜதார்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply