கற்பழிப்பு வழக்கில் விக்கி லீக் அதிபர் அசாங்கேயிடம் சுவீடன் விசாரணை
‘விக்கி லீக்’ இணையதளத்தில் அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத் துறையின் ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இதனால் உலக அளவில் பரபரப்பு ஏற்பட்டது.அதற்காக விக்கி லீக் அதிபர் ஜூலியன் அசாங் கேவை கைது செய்ய அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டது. எனவே அங்கிருந்து தப்பி லண்டன் வந்தார். இதற்கிடையே சுவீடன் சென்றிருந்த போது அங்கு பெண்களை கற்பழித்ததாக அசாங்கே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதற்காக அவரை கைது செய்து சுவீடன் அழைத்து செல்ல தீவிரம் காட்டப்பட்டது. உடனே அவர் லண்டனில் உள்ள ஈகுவேடர் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். கடந்த 2012–ம் ஆண்டு முதல் அங்கு தங்கியிருக்கிறார்.
எனவே சுவீடன் அரசால் அசாங்கேயை கைது செய்ய முடியவில்லை. முடிவில் அவரிடம் விசாரணை நடத்த ஈகுவேடர் தூதரகத்துடன் சுவீடன் அரசு ஒப்பந்தம் செய்தது.
அதன்படி அசாங்கேயிடம் சுவீடன் அரசு சார்பில் விசாரணை நடத்தலாம். விசாரணையின் போது நேரில் ஆஜராக அவர் சுவீடன் செல்ல மாட்டார். அதே நேரத்தில் அதிகாரிகள் லண்டனில் உள்ள ஈகுவேடர் தூதரகத்துக்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதை ஈகுவேடர் அரசும், அசாங்கேயும் ஒப்புக் கொண்டனர். அதை தொடர்ந்து கற்பழிப்பு வழக்கில் அசாங்கேயிடம் விரைவில் விசாரணை தொடங்க உள்ளது. இத்தகவலை சுவீடன் நீதித்துறை அமைச்சக அதிகாரி செசிலியா ரிட் செலஸ் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply