கூட்டு ஒப்­பந்தம் பத்து தினங்­களில் கைச்­சாத்­தி­டப்ப­டா­விடில் தீக்­கு­ளிப்பேன் : வடிவேல் சுரேஷ்

VADIVELதோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பளத்தை நிர்­ண­யிக்கும் கூட்டு ஒப்­பந்தம் எதிர்­வரும் பத்து நாட்­க­ளுக்குள் கைச்­சாத்­தி­டப்­ப­டா­விட்டால், அவர்­க­ளது சம்­பளத் தொகை என்­ன­வென்று கூறா­விட்டால் தோட் டத் தொழி­லா­ளர்­களை அழைத்து வந்து இந்த சபை­யி­லேயே தீக்­கு­ளிப்பேன். மலையக மக்­க­ளுக்­காக எனது உயி­ரையும் தியாகம் செய்­வ­தற்கு ஆயத்­த­மாக இருக்­கிறேன் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வடிவேல் சுரேஷ் நேற்று சபையில் தெரி­வித்தார்.பரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள விவா­காரம் தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மயில்­வா­கனம் தில­கராஜ் கொண்டு வந்த சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரனை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

வடிவேல் சுரேஷ் எம்.பி. மேலும் கூறு­கையில்,

இன்­றைய தினத்­திலே மலை­யக வர­லாற்றில் ஒரு சரித்­தி­ர­முக்­கி­யத்­துவம் வாய்ந்தப் பிரே­ர­ணையை நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.தில­க­ரா­ஜுக்கு எனது நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கிறேன்.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை தீர்­மா­னிக்­கின்ற கூட்டு ஒப்­பந்தம் என்­பது தொடர்­க­தை­யா­கவே இருந்து வரு­கின்­றது. பெருந்­த­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளு­டைய சம்­பள உயர்வை இழுத்­த­டிப்­ப­தற்கு கார­ண­மா­ன­வர்கள் யார்? என்ன கார­ணத்­தினால் மலை­யக மக்­களை பழி­வாங்­கு­கின்­றனர். தோட்டத் தொழி­லா­ளர்­களின் நாட் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­ப­தற்கு கடந்த ஒன்­பது மாத கால­மாக அந்த மக்கள் பழி­வாங்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

எமது நாட்­டி­லேயே பாரா­ளு­மன்­றத்­திற்கு மேலாக எந்த வோர் சபையும் கிடை­யாது பாரா­ளு­மன்­றமே இறு­தி­யா­னதும் உறு­தி­யா­னதும் முடி­வினை எடுக்கக் கூடிய இட­மாகும். இந்த சபையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன மற்றும் இரா­ஜாங்க அமைச்சர் ரவி சம­ர­வீர ஆகியோர் எமது மக்­க­ளுடன் இரண்­டரக் கலந்­த­வ­ராவர். அவர்கள் பெருந்­தோட்ட மக்­களின் பிரச்­சி­னை­களை நன்கு அறிந்து வைத்­துள்னர்.

எனினும் தொழிற்­சங்கம் என்ற பெயரில் ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­டு­ப­வர்கள் தொழிற்­சங்­க­வா­திகள் மேலும் காலத்தை தாழ்த்­தாது எமது உடன் பிறப்­புக்­களை பழி­வாங்­காது நாட்க்­களை எண்ணிக் கொண்­டி­ருக்கும் இந்தக் கட்­டத்­தி­லேயே எதிர்­வரும் பத்து நாட்­க­ளுக்குள் கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டா­விட்டால்இ அவர்­க­ளது சம்­பளத் தொகை என்­ன­வென்று கூறா­விட்டால் தோட்டத் தொழி­லா­ளர்­களை அழைத்து வந்து இந்த சபை­யி­லேயே தீக் குளிப்பேன் என்­பதை தெரி­வித்துக் கொள்­கிறேன். மலைய மக்­க­ளுக்­காக எனது உயி­ரையும் தியாகம் செய்­வ­தற்கு ஆயத்­த­மாக இருக்­கிறேன்.

அமைச்­சர்­க­ளான திகாம்­பரம் மனோ­க­ணேசன் இரா­த­கி­ருஷ்ணன் ஆகியோர் இணைந்து சம்­பள உயர்­வுக்­கான முன்­னெ­டுக்­கின்ற அதே­நேரம் பிர­தமர் ரணில்­விக்­கி­ரம சிங்க எமது மக்­களின் நிலை­மை­களை உணர்ந்து செயற்­பட்டு வரு­கிறார். அவ­ருக்கும் எமது மக்­களின் சார்பில் நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கிறேன்.

எம்­ம­வர்­களே எமது மக்­களை பழி­வாங்­கினர் ஆனால் அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன இரா­ஜாங்க அமைச்சர் ரவி­ச­ம­ர­வீர ஆகியோர் மீது எமக்கு நம்பிக்கையுள்ளது. அதேபோன்று எமது தலைவர் பிரதமர் ரணில்விக்கிரம சிங்கமீதும் நம்பிக்கையிருக்கிறது. ஆகையால் அதிவிரைவாக அதாவது எமது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி நிறைவடைவதற்கு முன்பதாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத் தொகையை இந்த சபை நிர்ணயிக்க வேண்டும் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply