அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாத மனநோயாளி மோடி: சி.பி.ஐ. சோதனை பற்றி கெஜ்ரிவால் கருத்து

aravinthடெல்லியில் உள்ள முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகத்துக்குள் இன்று காலை அதிரடியாக நுழைந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு சோதனை நடத்திவரும் வேளையில் அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாத பிரதமர் மோடி கோழைத்தனமாக சி.பி.ஐ.யை என்மீது ஏவி எனது அலுவலகத்தில் சோதனை நடத்தும்படி தூண்டி விடுகிறார் என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடியை கோழை என்றும் மனநோயாளி என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துவரும் நிலையில் முதல் மந்திரி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறவில்லை அவரது அலுவலகத்தில் உள்ள முக்கிய அதிகாரி ரஜீந்திர குமார் மீதான புகாரின் அடிப்படையில்தான் தற்போது அங்கு சோதனை நடத்தப்பட்டு வருவதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply