தீவிரவாதத்திற்கு முஸ்லீம்கள் மீது பழிபோடுவது ஐ.எஸ். போன்ற தீவிரவாத இயக்கங்களை ஊக்குவிப்பதாகி விடும்: மலாலா

malaதீவிரவாதத்திற்கு அனைத்து முஸ்லீம்களையும் குற்றம் சொல்லக்கூடாது இது அதிக ஜிகாதிகளை தீவிரவாதிகள் தேர்வு செய்ய உதவியாக அமைகிறது என பெண்கள் முன்னேற்றத்திற்காக போராடி வரும் நோபல் பரிசு பெற்ற இளம்பெண் மலாலா யூசுப் கூறி உள்ளார். மேலும் சமீபத்தில் அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் நுழைவதை தடை செய்ய வேண்டும் என்ற டோனால்டு ட்ரம்பின் கருத்தையும் விமர்சித்து உள்ளார்.

பாரிஸ் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கு எதிரான துவேஷம் பெருகி வருகின்றது. இந்த துவேஷமானது தீவிரவாதிகளுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்து விடக்கூடும். இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகமாகப்பேச, பேச நாமே அதிகப்படியான தீவிரவாதிகளை உருவாக்கி விடுவதுபோல் அந்த பேச்சுக்கள் அமைந்துவிடும்.

அரசியல்வாதிகள் எதையும் சிந்தித்து பேச வேண்டும். உங்களது குறிக்கோள் தீவிரவாதத்தை ஒழிப்பது என்றால், தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் குற்றம்சொல்ல முயற்சிக்காதீர்கள். இதைப்போன்ற பேச்சுகளால் மட்டுமே தீவிரவாதத்தை ஒருபோதும் ஒழித்துவிட முடியாது எனவும் மலாலா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply