கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மோடியுடன் சந்திப்பு
டெல்லி வந்துள்ள கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.முன்னதாக, இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, மத்திய அரசுடன் இணைந்து ரெயில் நிலையங்களில் வை-வை வசதி வழங்கும் திட்டம் பலூன்கள் மூலம் இணையவசதி ஏற்படுத்தும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.இன்றைய சந்திப்பின் போது, அவர் இத்தகைய திட்டங்களை பிரதமரிடம் விளக்கிக் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது, கூகுள் தலைமை அலுவலகத்தில் சுந்தர் பிச்சையை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply