கிழக்கு முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் தீர்மானம் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானது:கமலநாதன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வேறு கட்சிகளில் இணைந்து கொள்வோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக கிழக்கு மாகாண முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான); தெரிவித்துள்ள கருத்தானது கேலிக்குரியதும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானதுமாகுமென அமைச்சர் விநாயகமூர்தி முரளிதரனின் (கருணா அம்மமான்) ஊடகச் செயலாளர் கமலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு ஒழுக்காற்று நடவடிக்கையை நிச்சயமாக அவரால் மேற்கொள்ள முடியாதெனத் தெரிவித்துள்ள கமலநாதன  அவ்வாறு எடுக்கப்படுமாயின் அது தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானதொன்றாகவே கருதப்படுமெனவும் தெரிவித்துள்ளர்.

செங்கலடி பொதுச் சந்தைத் திறப்பு விழாவில் நேற்று முன்தினம் (23) கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வேறு கட்சிகளில் இணைந்து கொள்வோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படுமெனத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக  இன்று  கருத்துத் தெரிவித்த கமலநாதன், பிரதேச அரசியலைச் செய்து கொண்டு மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. அதுபோன்றே பிரதேசத்தில் அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியாது. கடந்த கால அனுபவங்கள் இதற்குச் சான்று பகிர்கின்றன.

இனரீதியான அரசியல் மூலமும் ஆயுத மேதால்களாலும் எமது தமிழ் சமூகம் கடந்த காலங்களில் எவ்வாறு பாதிக்கப்பட்டனவென்பதனை நாம் அறிவோம்.

தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைவதன் மூலமே தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முடியுமென்ற தீர்க்கமான முடிவின் அடிப்படையிலேயே நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டோம். இதன் மூலமே நாம் எமது பிரதேசத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள முடியும்.

அமைச்சர் கருணா அம்மான் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டமையை உள்ளுர் தமிழ் மக்கள் மட்டுமல்ல. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சமூகம் பாராட்டியுள்ளனவென்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply