பிலிப்பைன்சை நோக்கி புதிய புயல்: மெலார் சூறாவளிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு
பிலிப்பைன்சை தாக்கிய மெலர் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதிகளை திங்கள் கிழமை கடும் சூறாவளி தாக்கியது. மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த இந்த மெலர் சூறாவளி தாக்கியதையடுத்து கடும் காற்றுடன் கனமழை பெய்து. அந்நாட்டின் 7 மாகாணங்கள் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு மாகாணங்களில் உள்ள சுமார் ஏழரை லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் பிலிப்பின்சின் தெற்குப் பகுதியை நோக்கி வருவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிலிப்பின்ஸில் ஒவ்வொரு ஆண்டும் 20-க்கும் மேற்பட்ட கடும் புயல்கள் தாக்கி வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் வீசிய புயலில் 54 பேர் உயிரிழந்தனர். சென்ற 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய புயலில் சிக்கி சுமார் 7,350 பேர் உயிரிழந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply